More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எமது நாட்டுக்கு வருகைதரும் அனைத்து விமானப் பயணிகளும் கொவிட் நோயுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தி அறிந்து கொள்வதற்கு நடவடிக்கை!
எமது நாட்டுக்கு வருகைதரும் அனைத்து விமானப் பயணிகளும் கொவிட் நோயுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தி அறிந்து கொள்வதற்கு நடவடிக்கை!
Dec 12
எமது நாட்டுக்கு வருகைதரும் அனைத்து விமானப் பயணிகளும் கொவிட் நோயுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்தி அறிந்து கொள்வதற்கு நடவடிக்கை!

தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பாவே மற்றும் எஸ்வத்தினி போன்ற ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன அவர்கள் தெரிவித்துள்ளார்.



இதற்கு முன்னர் 2021 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவித்தல் மூலம் மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.



எமது நாட்டுக்கு வருகைதரும் அனைத்து விமானப் பயணிகளும் கொவிட் நோயுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும், அதாவது, பெற்றுக் கொண்ட தடுப்பூசி தொடர்பான அறிக்கை, கொவிட் தொற்றுக்குள்ளாகவில்லை என தமது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கை, கடவுச்சீட்டு தரவுப்பக்கம் போன்றன இணையவழியூடாக வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தி அறிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அவர்களுக்கும் அறிவித்துள்ளார்.



அதேநேரம் அவர் தெரிவித்ததாவது, எமது நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் தத்தமது ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் அடங்கிய கூற்றொன்றை உள்வருகை கருமபீடத்தில் இணையவழியூடாக வழங்குதல் கட்டாயமாகும். அவ்வாறு வருகை தரும் பயணிகள் தத்தமது குறியீட்டு இலக்கத்தில் முதற்பிரதியை தம்மிடம் வைத்திருத்தல் அவசியமாவதுடன், அல்லது அதன் ஸ்கான் பிரதியை தமது கைத்தொலைபேசியில் வைத்துக்கொள்வதும் கட்டாயமாகும். குறித்த புதிய ஒழுங்குவிதிகள் 2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருக்குமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.



சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் குறிப்பிட்டவாறு, 12 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் எமது நாட்டுக்கு வருகைதரும் போது பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் பெற்றுக்கொண்டதும், இலங்கை விமான நிலையத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகவில்லை என்பதைத் உறுதிப்படுத்துவதற்கு சமர்ப்பிக்கும் அறிக்கை தற்போது அவசியமில்லை. ஆயினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தமது பயணத்தை ஆரம்பிப்பதற்கு 72 மணித்தியாலயங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட நோய்த் தொற்று இல்லையென்பதை உறுதிப்படுத்திய ஆங்கில மொழியில் பெற்றுக்கொள்ளப்பட்ட இவ்வறிக்கையை முன்னரைப் போன்று எமது நாட்டு விமான நிலையத்தில் குறித்த அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.



ஒருவருக்கு கடந்த மூன்று மாதங்களில் கொவிட் தொற்று ஏற்பட்டிருப்பின் குறித்த பயணி மூலம் பயணத்தை ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலயங்களுக்கு முன்னர் கொவிட் இல்லையென்பதை உறுதிப்படுத்திப் பெற்றுக்கொண்ட அன்ரிஜன் சோதனைக் குறியீட்டை எடுத்துவரல் வேண்டும். அவ்வாறான பயணிகள் தனக்கோ அல்லது நோய்த் தொற்று இருந்தமையை உறுதிப்படுத்துவதற்காக ஆங்கில மொழியில் வழங்கிய பிணி ஆய்வு அட்டையை அல்லது அன்ரிஜன் சோதனை அறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep26

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி

Jul26

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீ காயங்களுடன் உயிரிழந்த

Mar03

அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றி

Oct25

கோதுமை மாவை திறந்த கணக்குகளின் கீழ் இறக்குமதி செய்வதற

Jul08

அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந

Feb13

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத

Mar08

மோசடி வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள திலினி ப

Mar24

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து

Oct05

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்ப

Sep21

மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக

Apr24

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

Mar11

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம

Jan28

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா

Mar16

விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப