மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் புதிதாக 11,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 7,124 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தபாதிப்பு 3 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 201 பேர் உள்பட நாடுமுழுவதும் மேலும் 266 பேர் இறந்துள்ளளர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,057 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்றும் அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று 13,204 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 63 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,42,826 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 262 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும்.
நாடு முழுவதும் நேற்று 23,84,096 டோஸ்களும், இதுவரை 108 கோடியே 47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 8,70,058 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை 61.60 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.