More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்!
சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்!
Oct 31
சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்!

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.



ஜி-20 மாநாட்டிற்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு கூறியிருப்பதாவது:-



இந்தியா எப்போதுமே திறமையாகவும், உணர்திறன் கொண்டதாகவும், எச்சரிக்கையாகவும், அடக்கமாகவும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பினார். அவர் எப்போதும் தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.



இன்று அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாடு வெளிப்புற மற்றும் உள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி வருகிறது. 



கடந்த ஏழு ஆண்டுகளில் பல சகாப்தங்களாக உள்ள பழமையான தேவையற்ற சட்டங்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது.



நிலம்,  நீர், காற்று, விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் திறன்கள் மற்றும் உறுதிப்பாடு  முன்னெப்போதும் இல்லாத வகையில்  உள்ளது.



ஒரே பாரத்,  சிறந்த இந்தியா என்பதற்காக தனது உயிரைக் கொடுத்த சர்தார் பட்டேலுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. பட்டேல், வரலாற்றில் மட்டும் அல்ல அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்.



இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov23

சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட

Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

May09

சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ

Feb04

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு

May31

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி

Sep06

நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவா

Oct07

திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட

May01

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-

Aug11

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா

Jul17

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச

Aug13

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர

Apr30

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த

Jun01

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு

Mar23

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

Mar04

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்