More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நேரில் சென்று ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
நேரில் சென்று ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
Oct 31
நேரில் சென்று ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.



ஆனால், ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது.



இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனைக்கு நெரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் ரஜினி காந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், மருத்துவமனை மருத்துவர்களிடம் ரஜினிக்கு  அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.



ஏற்கனவே, அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.



கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்ட ரஜினி காந்த், தனது மகளின் செயலியை வெளியிட்டதுடன்,  குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தையும் பார்த்து ரசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செ

Jul05

தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற

Feb20

கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வக

Jun24

கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்

Mar29

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தே

Jun17

யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்

Apr22

மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க

Aug13

ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ

Feb18

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர

Feb18

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற

Jan17

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின

Oct04

உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத

Aug17

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்

May31

போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி

Feb17

தருமபுரியில் பாமக வேட்பாளர்கள் அறிமுக பிரச்சார  கூட