More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி!
தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி!
Oct 24
தாதாசாகேப்’ விருது கிடைப்பது மகிழ்ச்சி- டெல்லி செல்லும் முன்பு நடிகர் ரஜினி பேட்டி!

இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது. தாதா சாகேப் பால்கே விருது ஆண்டு தோறும் மத்திய அரசால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என போற்றப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்தநாள் நூற்றாண்டான 1969-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.



இந்த ஆண்டுக்கான விருதுக்கு நடிகர் ரஜினி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.



கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் நாளை (25-ந் தேதி) தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.



இந்த விழாவில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. அதற்காக ரஜினி டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் முன்பு விருது கிடைத்து இருப்பது பற்றி ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:-



தாதாசாகேப் பால்கே விருது நான் எதிர்பாராதது. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் பாலச்சந்தர் அருகில் இல்லாதது வேதனை அளிக்கிறது என்றார்.



டைரக்டர் பாலச்சந்தர் தான் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதே விருதை பாலச்சந்தரும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இந்த விருதை பெற்றவர் ஆவார்.



டெல்லியில் நடைபெறும் விழாவில் தங்கத்தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பணமும் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

தமிழகத்தில்

டாக்டர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச

Mar03

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசனுடன் கோவை ச

May12

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம

Jul09

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இமாச்சலப் பிரதேசத

Feb26

கோவையில் 76 மாத பஞ்சப்படி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஓய்

Oct03

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி

Nov03
Feb12

ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும

Dec31

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்

Mar27

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி

Sep20

வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்

Jan25

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப

May21

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க கடந

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த