இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
