கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா துரிதமாக செயல்பட்டது, நல்ல பதிலடி கொடுத்தது என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். பாராட்டி உள்ளது.
குறிப்பாக நிதி ஆதரவு அளித்தது, பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு ஆதரவை அதிகரித்தது என தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் சீர்திருத்தங்களையும், தனியார் மயத்தையும் தொடர்கிறது என கூறிய சர்வதேச நிதியம், அதிகாரிகள் தொடர்ந்து கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செய்ததாகவும் பாராட்டியது.