மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு இன்று 90-வது பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
ஏவுகணை நாயகனான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம். அவர் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல் கலாமுடன் இருக்கும் புகைப்படங்களையும் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...வகுப்புக்கு வராததால் தாக்குதல்- மாணவனை எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது