உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டு, 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கு கபில் சிபல் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘லகிம்பூர் கேரியில் பயங்கரம் நடந்துள்ளது. மோடிஜி, ஏன் அமைதி காக்கிறீர்கள்? நீங்கள் ஒரு அனுதாப வார்த்தை சொன்னால் போதும். அது ஒன்றும் கடினமில்லையே? நீங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? தயவு செய்து சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.