இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன், கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய நண்பரான இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினேன். இந்த பேச்சு இருநாடுகளின் பரஸ்பர நல்லுறவுக்கு வலு சேர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் பலாலிக்கு சென்ற ஹர்ஷ்வர்தன், அங்கு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் விமான நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.