More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி!
பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி!
Oct 04
பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி!

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.



மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.



தேர்தல் கமி‌ஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதல்-மந்திரியாக அல்லது மந்திரியாக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும்.



அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5-ந்தேதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.



அவரது பாரம்பரிய தொகுதியான பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.



மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் வக்கீல் பிரியங்கா டிப்ரிவாலை பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.



இதில் மம்தா பானர்ஜிக்கும், பிரியங்கா டிப்ரிவாலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.



கடந்த மாதம் 30-ந்தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. 57 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.



பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்.



மம்தா பானர்ஜி முதல் சுற்றில் 5,333 ஓட்டுகளும், பிரியங்கா டிப்ரிவால் 2,956 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். மம்தா பானர்ஜி 2,377 ஓட்டுகள் முன்னிலை பெற்றிருந்தார்.



2-வது சுற்றில் 14,284 ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜிக்கு 9,974 ஓட்டுகளும், பிரியாவுக்கு 3,828 ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. 2-வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 6,146 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.



3-வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 9,974 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 11-வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி, சுமார் 34 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.



இந்நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.



20-வது சுற்றில் பாஜகவின் பிரியங்கா டிப்ரிவாலை விட 56,388 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug31

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Jul17

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கிய பிறகு கடந்த ஏ

Apr19

இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள

Jun12

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த

Jun02

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித

Jul16

கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்

Jan21

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ

Sep13

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதிய

Feb04

பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை

Sep19

இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத

May11

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா

Jan29


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா

Aug01

கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ