பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
பிரேசிலில் அடுத்த ஆண்டு முக்கிய தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதி பின்னடைவைச் சந்தித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்-19 பரவல் நிலையை அவர் கையாண்ட விதத்தில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அத்துடன் கொவிட்-19 காரணமாக 6 இலட்சம் பேர் மரணித்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் 160க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.