More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மெகா தடுப்பூசி முகாமில் அலைமோதிய கூட்டம்- 25 லட்சம் பேருக்கு செலுத்த முடிவு!
மெகா தடுப்பூசி முகாமில் அலைமோதிய கூட்டம்- 25 லட்சம் பேருக்கு செலுத்த முடிவு!
Oct 03
மெகா தடுப்பூசி முகாமில் அலைமோதிய கூட்டம்- 25 லட்சம் பேருக்கு செலுத்த முடிவு!

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மட்டும் 68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 42 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.



இந்த நிலையில் இன்று 4-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.



இன்று நடைபெறும் முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சென்னையில் முகாம்கள் நடப்பதை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, 22 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி இதுவரை போடவில்லை.



இந்த முகாம்கள் தெருக்களிலும், வீடுகளின் அருகிலேயும் நடத்தப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.



தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் கூட்டம் அலைமோதியது.



வழிப்போக்காக சென்றவர்கள் கூட வாகனங்களை நிறுத்திவிட்டு முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு சென்றதை பார்க்க முடிந்தது.

 



வீடுகளின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதால் பெண்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள்.



மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கம்பம், குமுளி, பெரியகுளம், திருப்பத்தூர், புதுக்கோட்டை பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-



கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்டு, இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு 28 நாட்கள் முடிந்து யாரெல்லாம் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு கோவாக்சின் 5 முதல் 6 லட்சம் அளவிற்கு கையிருப்பில் உள்ளது. அவர்கள் முன் வந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதேப்போல் கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் தவணை செலுத்திக்கொண்டு 84 நாட்கள் முடிந்த நிலையில் இரண்டாவது தவணை செலுத்திக்கொள்வோரும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 25 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.



ஒன்றிய அரசின் சார்பில் 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசிகள் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது. தமிழக அரசு மிகச் சிறப்பாக தடுப்பூசி செலுத்தியதால் 36 லட்சம் தடுப்பூசிகள் அளவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த மாதத்திற்கு 1 கோடியே 23 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 30 லட்சம் அளவுக்கு கூடுதலாகப் பெற்று அக்டோபர் மாதத்திற்கு 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்றார்.



இந்த மாத இறுதிக்குள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுகொள்ளும் நிலையை உருவாக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ

Jun09

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ

May31

தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Jun20
Jan24

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை

Dec31


சென்னையில் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேன

Jan28

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Jul25

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங

Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Apr27

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க

Jan19

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்

Feb18

கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க

Mar29

தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ

Jan31

பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப