More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரத்த தான கொடையாளிகளுக்கு பாராட்டு விழா... திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 40 பேர் கௌரவிப்பு!.
ரத்த தான கொடையாளிகளுக்கு பாராட்டு விழா... திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 40 பேர் கௌரவிப்பு!.
Oct 02
ரத்த தான கொடையாளிகளுக்கு பாராட்டு விழா... திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட 40 பேர் கௌரவிப்பு!.

உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கும் தானமே சிறந்தது. அந்த தானத்திலும் சிறந்தது தான் ரத்த தானம். மக்களிடையே ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிகப்படியான முறை ரத்தம் வழங்கியவர்களை பாராட்டி கௌரவம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ரத்த தானம் செய்த கொடையாளர்கள் 40 பேருக்கு கோவை மாவட்டத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த 40 பேரில் திமுக முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக்கும் அடக்கம்.



ஆரோக்கியமாக உள்ள யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். கிட்டத்தட்ட 300 மிலி ரத்தமே பெறப்படும். ஒவ்வொருவரும் தானமாக வழங்கும் ஒரு யூனிட் ரத்தம் மூலம் 4 உயிர்களை காப்பாற்றிட முடியும் என்பதால் ரத்த தானத்தை ஊக்குவிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகத் தான் தன்னார்வமாக ரத்த தானம் செய்வோருக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. அதன்படி 2020-21ஆம் ஆண்டுக்கான தன்னார்வ ரத்த கொடையாளர்கள் 40 பேருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 



இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். இவர் தன்னார்வ ரத்த கொடையாளர்களான முன்னாள் எம்எல்ஏவும், திமுக மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக் உள்ளிட்ட 40 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரம் செய்தார்.  கோவையில் 2020-21ஆம் ஆண்டு நான்கு அரசு ரத்த வங்கிகளின் மூலம் 10,925 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்  63 ரத்த தான முகாம்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 2,884 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep05

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்

Jun18

இந்தியாவில 

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்

Dec22

தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங

Aug18

கேரளாவில்  கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்

Aug18

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந

Aug02

ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூற

Sep18

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர

Apr24

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப

Jul10

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட

Sep12

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த

Feb04

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு

May24

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந

Apr22

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை

Jul03

முதல்-அமைச்சர்