என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தில் 'பீச்சாங்கை' பட நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். மேலும் ஐரா, பகவதி பெருமாள், ரோகினி ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பால நந்தகுமார், நக்சலைட் தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்திரம் மற்றும் ஜெயராம் தயாரித்து வருகின்றனர். குணா பாலசுப்பிரமணியம் இசையில் உருவாகியுள்ஹ இப்படத்திற்கு அருள் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு வரியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் புகைப்படங்களை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.