More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் திடீர் விலகல்!
பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் திடீர் விலகல்!
Oct 01
பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் திடீர் விலகல்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். 2021 தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.



பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடைசி இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்தார். முதல் போட்டியில் 14 ரன்களும், 2-வது போட்டியில் 1 ரன்னும் எடுத்தார்.



இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திடீரென ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தாக்காமல் இருக்க வீரர்களுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக சோர்வு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு கிறிஸ் கெய்ல் வந்துள்ளார்.



இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘கடந்த சில மாதங்களாக கரீபியன் பிரிமீயர் லீக், தற்போது ஐ.பி.எல். ஆகியவற்றின் பாதுகாப்பு வளையத்தில் (Bio-Bubble) இருந்துள்ளேன். மனரீதியில் புத்துணர்ச்சி பெற்று, புதுத்தெம்புடன் வர விரும்புகிறேன்.



டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதற்கான மீண்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இதனால் துபாயில் ஓய்வு எடுக்க இருக்கிறேன். இதற்கான நேரத்தை கொடுத்த பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அணிக்கு என்னுடைய வாழ்த்து மற்றும் நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்’’ என்றார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

Oct01

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல

Mar06

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண

Mar04

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா

Feb08

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம

Feb02

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத

Jan20

பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வர

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Mar23

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந

Sep16

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந

Dec22

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரி

Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Feb07

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன

Oct26

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப