More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஈகுவடார் சிறையில் கலவரம் 24 பேர் பலி!
ஈகுவடார் சிறையில் கலவரம் 24 பேர் பலி!
Sep 30
ஈகுவடார் சிறையில் கலவரம் 24 பேர் பலி!

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அந்த நாட்டில் மொத்தமுள்ள 60 சிறைகளில் 29 ஆயிரம் கைதிகளை மட்டுமே அடைத்து வைக்க முடியும் என்கிற சூழலில் அதைவிட அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்



இது சிறைகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வித்திடுகிறது. குற்ற வழக்குகளில் சிறைகளில் அடைக்கப்படும் போதை பொருள் கடத்தல்காரர்கள், கொலையாளிகள், கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தனிதனி குழுக்களாக பிரிந்து அடிக்கடி கோஷ்டி மோதல்களில் ஈடுபடுகின்றனர்.‌



இது ஒருபுறமிருக்க ஆயிரக்கணக்கான சிறை கைதிகளை கண்காணிக்க வெறும் 1,500 சிறை காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள பல சிறைகளில் சிறை அதிகாரிகளை விட கைதிகளின் கையே ஓங்கியுள்ளது.



மேற்கூறிய காரணங்களால் ஈகுவடார் சிறைகளில் அடிக்கடி கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன. இதில் ஏரளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன.



இதன் காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 90 நாட்களுக்கு அவசரநிலையை அந்த நாட்டின் அதிபர் மோரேனோ பிரகடனப்படுத்தினார். ஆனாலும் சிறைகளில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததால் உயிர் பலிகள் தொடர்கின்றன.



இந்த நிலையில் ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் இருக்கும் சிறையில் நேற்று முன்தினம் மாலை இருதரப்பு கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது.



‘லாஸ் வெகோஸ்' மற்றும் ‘லாஸ் கேனரஸ்' என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.



மேலும் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தினர். இதனால் ஒட்டுமொத்த சிறையும் கலவர பூமியாக காட்சி அளித்தது.



கைதிகள் மிகவும் ஆக்ரோஷத்துடன் மோதலில் ஈடுபட்டதால் அங்கிருந்த சிறை காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது.



எனவே கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். எனினும் சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகே கலவரத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.



இருந்த போதிலும் இந்த கலவரத்தில் 24 கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 48 கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதனிடையே சிறையில் கலவரம் நடந்தபோது அங்குள்ள கைதிகளின் உறவினர்கள் பலர் தங்களின் அன்பானவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ள சிறைகளுக்கு வெளியே கண்ணீர் மல்க காத்திருந்தனர்.



முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஈகுவடாரில் ஒரே நாளில் 3 சிறைகளில் நடந்த மிகப்பெரிய கலவரத்தில் 79 கைதிகள் கொன்று குவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி

Sep10

வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட

Mar13

ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வ

Feb02

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75

Jan04

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல

Jun08

சீனாவில் அண்மை காலமாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங

Apr17

கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததைய

Dec29

உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான

Jul15

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்

Sep06

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகளாவி

Jan26

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா

May24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar29

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி நிற்கும

Feb26

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக

Jun03

பொதுபல சேனா இயக்கம் தொடர்ந்தும் இனவாத மற்றும் மதவாதத்