More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் உறுதி.
போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் உறுதி.
Sep 30
போலீசாரின் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் உறுதி.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் நேற்று இரவு காரில் தர்மபுரிக்கு புறப்பட்டார். அதியமான்கோட்டை பகுதியில் அவருக்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பளித்தனர். அந்த பகுதியின் அருகே உள்ள அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 8.17 மணிக்கு முதலமைச்சரின் கார் திடீரென நுழைந்தது.



காரிலிருந்து இறங்கிய முதலமைச்சர் அந்த போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த முதலமைச்சர் பொதுநாட்குறிப்பு, தினசரி பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார்.



போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள வார விடுமுறை சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்றும் கேட்டார். போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட்டிருப்பதும், இடி.ஆர். குறைப்பு கைவிடப்பட்டிருப்பதும் மிகவும் உதவியாக உள்ளது என்று அப்போது அங்கிருந்த போலீசார் தெரிவித்தனர்.



இதைத்தொடர்ந்து புகார் மனுக்களை விசாரிக்கும் முறை, முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் அனுப்பப்படும் புகார் மனுக்கள் மீது எப்படி விசாரணை நடத்தப்படுகிறது என்று அப்போது கேள்வி எழுப்பினார். இத்தகைய மனுக்கள் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரடி விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று போலீசார் பதிலளித்தனர்.



இதைத் தொடர்ந்து குறைகள், கோரிக்கைகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்கள் போலீஸ் நிலையத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.



அப்போது போலீஸ் நிலைய வளாகத்தின் வெளிப்பகுதியில் திரண்டிருந்த, போலீசாரின் குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் முதலமைச்சரிடம் காவலர்கள் குடியிருப்பில் உள்ள குழந்தைகள் சில நிமிடங்கள் பேசினர். அப்போது குழந்தைகள், காவலர் குடியிருப்பின் பின்புறம் விளையாடுவதற்காக ஒரு பூங்கா வேண்டும் என கோரிக்கை வைத்தனர், அதனை உடனடியாக செய்து கொடுப்பதாக தெரிவித்தார், இதனை தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.



இந்த ஆய்வின்போது, கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன், நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



முதலமைச்சரின் திடீர் ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் உட்பட மொத்தம் 27 போலீசார் பணிபுரிகின்றனர். ஆனால் அதியமான் கோட்டை காவல் எல்லை மற்றும் மக்கள்தொகையை கணக்கிடும் பொழுது பாதுகாப்பு பணிகள் மற்றும் ரோந்து பணியில் உள்ளிட்டவற்றுக்கு மொத்தம் 60 போலீசார் பணிபுரிய வேண்டும். இந்த ஆனால் அதியமான் போலீஸ் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை பல ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்த

Aug06

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய

Aug11

கோவையில் 

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச

Aug18

சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் உயர்ந்து வரும் நிலை

Sep25

தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ

Apr19

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின

Oct07

1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத

May30

அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர

May03

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுட

Mar08

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Mar08

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.

Sep19

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி

Oct02

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்

Mar08

தமிழகத்தில்