மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத்தில் கார் ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வீதிவிபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளது
களுதாவளை கடற்கரை வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய ரவீந்திரன் பிரசாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்