More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!..
திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!..
Aug 21
திரையரங்குகள் திறக்கப்படுமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!..

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.



தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்தார். இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுப்போக்கு இடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இன்றளவும் அனுமதி அளிக்கப்படவில்லை.



இந்த சூழலில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வருகின்ற 23 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. இதனால் ஊரடங்கை மேலும் நீடிப்பதுடன், தளர்வுகள் அளிப்பது அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.வருகின்ற செப் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டது. எனவே இதன் சாத்தியக்கூறுகள் குறித்தும், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் அது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May08

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை

Sep06

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வ

May27

தமிழ்நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவியதன் காரணமாக கட

Jul18

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க

May16

கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந

Oct21

பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன

Feb27

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர

Mar11

டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்

Jul17

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப

Jun03

ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த

Jun08

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர

Jul23

இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனா

May21

தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பா

Apr04

அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்