More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இன்று முதல் தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிடலாம்!
இன்று முதல் தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிடலாம்!
Aug 21
இன்று முதல் தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிடலாம்!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி தாஜ்மகால் மூடப்பட்டது. 



இந்நிலையில், தாஜ்மகால் இன்று முதல் இரவு நேர பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.



இதுதொடர்பாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் வசந்த குமார் ஸ்வர்ணாகர் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:



தாஜ்மகாலை இரவு நேரத்தில் சென்று பார்வையிட வசதியாக ஆகஸ்டு 21, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.



வழக்கமாக, வெள்ளிக்கிழமைகளில் தாஜ்மகால் மூடப்படும். ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (22-ம் தேதி) மீண்டும் மூடப்படுகிறது. இதன்படி, இரவு 8:30-9:00, 9:00-9:30, 9:30-10:00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 



இதற்காக ஆக்ராவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு மைய அலுவலகத்தில் சுற்றுலாவாசிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.



எனினும், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு நேரத்தில் 50 சுற்றுலாவாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியட

Feb01

ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த

Apr02

ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு

Nov21

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க

Apr01

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு

Jun23

2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த

Jul14

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய

Oct04

மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற

Aug28