கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஒருநாள் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைவதும், அடுத்த நாள் 20 ஆயிரத்தை தாண்டியும் பதிவாகி வருகிறது.
இன்று தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று புதிதாக 21,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 179 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18,731 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய பாதிப்பு மொத்த பரிசோதனையில் 15.5 சதவீதமாகும்.
கேரளாவில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 10 முறை தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று 21,613 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 16-ந்தேதி 12,294 பேரும், 15-ந்தேதி 18,582 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர்