More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மக்கள் தொடர்பாக அவதூறு வீடியோ கேரள ரிசார்ட்டில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் கைது!
மக்கள் தொடர்பாக அவதூறு வீடியோ கேரள ரிசார்ட்டில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் கைது!
Aug 15
மக்கள் தொடர்பாக அவதூறு வீடியோ கேரள ரிசார்ட்டில் பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் கைது!

* என்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என போலீசாரிடம் மிரட்டல்

* சென்னை அழைத்து வர போலீசார் ஏற்பாடு



சென்னை: பட்டியலின மக்கள் தொடர்பாக அவதூறு வீடியோ வெளியீடு மிரட்டல் விடுத்து தலைமறைவான நடிகை மீரா மிதுன், கேரளாவில் உள்ள ரிசார்ட்டில் பதுங்கியிருந்தபோது நேற்று கைது செய்யப்பட்டார். அப்போது தன்னை தொட்டால் கத்தியால் குத்திக் கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். மாடலிங் துறையை சேர்ந்தவர் நடிகை மீரா மிதுன். ஒரு சில சினிமாக்களில் துணை நடிகையாக தலை காட்டியுள்ளார். அதன்பிறகு மாடலிங் துறையிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் அவ்வப்போது தனது சமூக வலைத்தள கணக்குகளில் யாரையாவது வம்புக்கிழுத்து மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நடிகர்கள் விஜய், சூர்யா, கமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் குறித்தும், அவர்களுடைய குடும்பத்தினர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி அவரது ரசிகர்களிடம்  சிக்கிக் கொண்டார்.



இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் மீரா மிதுன் பேசி வெளியிட்டிருந்த வீடியோவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மக்களைப்  பற்றி அவதூறாக பேசியிருந்தார். மதுரை,  சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள்  மற்றும் அமைப்பினர் புகார் அளித்தனர். அதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்னை மத்திய குற்றப்பிரிவில்  புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டது.  



ஆனால் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என்னை தாராளமாகக் கைது செய்து கொள்ளுங்கள், காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னை கைது செய்வது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும். பட்டியலின மக்கள் அனைவரையும் நான் தவறானவர்கள் என்று கூறவில்லை. எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களை மட்டுமே தவறானவர்கள் என்று கூறினேன் என்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.



இந்நிலையில் கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள சுப்ரீம் ரிசார்ட்டில் பதுங்கியிருப்பதாக செனை்ன போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் கிடைத்தது. அதனால், மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கருணாநகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைது செய்யும் போது கூட அதை வீடியோ எடுத்து என்னை தொட்டால் என்னை நானே கத்தியால் குத்திக் கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா என்ன? என்னை கைது செய்வது நடக்காது. அப்படி நடந்தால் அது கனவில் மட்டுமே நடக்கும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Oct13

இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட

Jul20

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந

Sep16

 ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப

Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

Aug31

ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ

Apr13

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ

Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Jan21

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்

Mar15

குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில

May25

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா

Jul21
Jul14

தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்

Jul03
Dec20

பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்