நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்ந்தவர் முத்துமனோ (27). கொலை வழக்கில் கைதான இவர், பாளை மத்திய சிறையில் பிற கைதிகளால் தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து 7 பேரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் பேரில் கடந்த 2ம் தேதி முத்துமனோ உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர். கடந்த 87 நாட்களாக தொடர்ந்து 200 சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து முத்துமனோவை அடித்துக்கொன்ற ஜேக்கப், கொக்கிகுமார் உள்ளிட்ட 7 பேர் மீது 1,700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் நேற்று நெல்லை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.