More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி
Jul 16
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி

கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம் தயாராக உள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.



தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொடங்கிய பேரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணி தி.நகர் திருமலைப்பிள்ளை சாலை வழியாக சென்று அங்குள்ள காமராஜர் இல்லத்தில் நிறைவடைந்தது.



இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இப்பேரணியில், மேலிட பொறுப்பாளர் ரிவல்ல பிரசாத், மூத்த தலைவர்கள் தங்கபாலு, செல்லக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், பொருளார் ரூபி மனோகரன் எம்எல்ஏ, மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், அடையார் துரை, ரஞ்சன் குமார், ஜெ.டில்லிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



பேரணியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மின்சார தேவைக்காக மேகதாது அணை கட்டுவதாக கர்நாடக அரசு தெரிவிக்கின்றது. இதனால், கர்நாடகத்திற்கு மின்சாரத் தேவையென்றால் தமிழகமே மின்சாரத்தை வழங்க தயாராக உள்ளது. எனவே மேகதாது அணைகட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar19

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால

Jan14

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய

Jan01

வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண்

Jan26

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்

Jul01

கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்

Jun18