பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், பிரசாதம் சாப்பிட்டவுடன் என்னுடைய குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படைந்தது. கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிரசாதம் சாப்பிட்ட பின் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது என்றார்.
இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் பாதிப்பு அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.