மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அதற்கு பதிலாக அவர் ‘பெட்ரோலின் குரல்’, ‘டீசலின் குரல்’, ‘தடுப்பூசியின் குரல்’ என்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
மத்திய அரசுக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு ஒரு பதிலும் வரவில்லை. கவர்னரை மாற்றக்கோரி கடிதம் எழுதியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.