More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • யோகா நேபாளத்தில் தான் உருவானது - பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு
யோகா நேபாளத்தில் தான் உருவானது - பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு
Jun 22
யோகா நேபாளத்தில் தான் உருவானது - பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்தக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன்படி 7-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிராணாயாம மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடந்தன.



இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் நேபாள நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசியதாவது:



யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார்.



நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது எனதெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr19

சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Oct18

இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின

Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Sep05

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு

Feb27

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர

Jun29

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Jun24

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர

Jan23

தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந

Oct02

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

Oct31

முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான

Jul21

மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்