More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை!
நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை!
Jun 08
நடிகை சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை!

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.



அதில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார்.



இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடமும் விசாரணை நடத்தி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.



இந்த நிலையில் மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, 9-ந் தேதி (நாளை) வரை மணிகண்டனை கைது செய்ய தடை விதித்துள்ளது.



இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



இதையும் படியுங்கள்... முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் 3 பேருக்கு சம்மன்



இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள். அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார். அந்த ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு செய்த டாக்டரிடம் விசாரணை நடக்கிறது.



மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்த போது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சாந்தினி வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மணிகண்டன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.



அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து வருகிறோம். சாந்தினியை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற அனுமதி கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம்.



கோர்ட்டு அனுமதி கிடைத்தவுடன் சாந்தினியிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படும்.



இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

Jul20

கேரளாவில் ஏழைகளுக்காக 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படு

Sep22

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட

Jul13

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தண

Mar28

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக

Feb08

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப

Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

Apr30

 இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்

Jul11

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா

Apr09

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ

Dec19

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத

Mar12

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக

Oct18

கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவ

May15

இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்