வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா? மதுரை வந்தது மிக்க மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி தமிழில் உரையாடினார்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற பாஜக – அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “வெற்றிவேல், வீரவேல். நல்லா இருக்கீங்களா? மதுரை வந்ததில் மிக்க மகிழ்ச்சி என தமிழில் பேசி உரையை தொடங்கினார் . தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது . புண்ணிய பூமியாக விளங்குகிறது.உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை . மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். 1980ல் எம்ஜிஆர் ஆட்சியை மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி கலைத்தது.அப்பொழுது தென் தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தனர்.எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது . சாலை போக்குவரத்து, ரயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்” என்றார்