More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 5 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையை தேடுகின்றனர்” உதயநிதி கிண்டல்!
5 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையை தேடுகின்றனர்” உதயநிதி கிண்டல்!
Mar 31
5 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையை தேடுகின்றனர்” உதயநிதி கிண்டல்!

தமிழக சட்டமன்ற வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ,தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளது, தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் ஒருபுறமும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுபுறமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில் நேற்று தாராபுரத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எங்கள் நோக்கம் வளர்ச்சி. காங்கிரஸ் – திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல். . தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை திமுக இழிவுப்படுத்தியுள்ளது . இதனை வன்மையாக கண்டிக்கிறேன். பாஜகவுக்கு வளர்ச்சிதான் முக்கியம் .ஆனால் திமுக காங்கிரஸ் அவர்களது குடும்பம் தான் முக்கியம். திமுக இளவரசர் பொறுப்புக்கு வந்த பிறகு பல மூத்த தலைவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர்” என்று உதயநிதியை மறைமுகமாக சாடினார்.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், “சீரியர்களை ஓரம் கட்டிவிட்டு வந்தவர்தான் பிரதமர் மோடி. குஜராத் முதல்வராக எத்தனை பேரை நீங்கள் ஓரம்கட்டி வந்தீர்கள் என மோடிக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அடிக்கல் நாட்டிய ஒரு செங்கலையும் எடுத்து வந்ததால் 5 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையை தேடுகின்றனர்.தேர்தல் முடிந்ததும் மதுரை எய்ம்ஸ் செங்கல் மீண்டும் திருப்பி ஒப்படைப்பேன்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத

Dec30

தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Sep12

ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Jan19

இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன

Apr08

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க

Jul14

தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்

Apr30

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த

May04

இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது

Feb22

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப

Aug29