More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தோற்றால் தற்கொலை’ சர்ச்சை போஸ்டர் விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
தோற்றால் தற்கொலை’ சர்ச்சை போஸ்டர் விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!
Mar 31
தோற்றால் தற்கொலை’ சர்ச்சை போஸ்டர் விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆக்கிரமித்துள்ளார். அதற்குக் காரணம் அவர் கண்ணீர் சிந்துவது போன்று இருக்கும் ஒரு வைரல் போஸ்டர் தான். தொடர்ந்து இருமுறை விராலிமலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருப்பதால், இம்முறையும் வெற்றிபெற வேண்டும் என்ற கௌரவ பிரச்சினையில் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். ஆனால் வெற்றிக்கான வாய்ப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.



திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் விஜயபாஸ்கருக்கு சரிசமமாகப் போட்டியிடுகிறார். சென்டிமென்ட் அஸ்திரத்தை எடுத்து மக்களைத் தன்வசப்படுத்தி வருகிறார். இதனால் வெற்றி கையை விட்டு போய்விடுமோ என்ற அச்சம் விஜயபாஸ்கருக்கு இயல்பாகவே எழுந்திருக்கிறது. உட்கட்சி விவகாரம், அமமுக வாக்கு பிரிப்பு, ஐடி ரெய்டு என பல முனை தாக்குதல்களைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து கடுமையான சவால்களை விஜயபாஸ்கருக்கு தந்துள்ளன. வேறு வழியில்லாமல் பழனியப்பன் அஸ்திரத்தைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு விஜயபாஸ்கர் தள்ளப்பட்டார்.



இச்சூழலில் அவர் சோகமாக இருப்பது போன்ற ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஒருவர், அவரே உருவாக்கிய போஸ்டர் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், “வெறும் 10 நாட்கள் தேர்தலுக்காக ஊருக்குள் வந்து ஓட்டுக் கேட்பவர்களே தோல்வியடைந்தால் உயிரை விட்டுவிடுவேன் என்று கூறும்பொழுது, 10 ஆண்டுகள் வாக்களித்த மக்களுக்காக இரவு பகல் பாராமல் ஒவ்வொரு கஷ்டகாலங்களிலும் உடன் நின்ற என்னுடைய முடிவு எப்படி இருக்கும்? – முடிவு உங்கள் கையில்?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமது தளத்தில் இதுகுறித்த செய்தியும் வெளியிடப்பட்டது.



இதனை விஜயபாஸ்கர் வெளியிட்டதாக நினைத்து நெட்டிசன்கள் ட்ரோல் மீம்ஸ்கள் போட்டு அதகளப்படுத்தி விட்டனர். தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், “இது முழுக்க முழுக்க தவறான செய்தி! என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும் என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது, உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது.



இது முழுக்க முழுக்க தவறான செய்தி!

என் தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியிருக்கும் நற்பணிகள் மீதும் என் மக்களின் மீதும் நான் வைத்திருக்கும் நம்பிக்கை இமயம்போல உயர்ந்தது, உறுதியானது. இப்படிப்பட்ட கோழைத்தனமான வார்த்தைகளை எனக்கு சிந்திக்கக்கூடத் தெரியாது..நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன். எனது முகநூல் (Dr.C.Vijayabaskar), டிவிட்டர் (vijayabaskarofl) இன்ஸ்டாகிராம் (vijayabaskarofl) பக்கங்களில் என் கைப்பட நான் பதிவிடும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே முற்றிலும் உண்மையானவை! மற்ற குழுப்பதிவுகளிலோ பிற பக்கங்களிலோ என்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. இந்த போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது, எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் சித்தரிக்கப்படுபவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் !



நான் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்பட்டவன். எனது முகநூல் (Dr.C.Vijayabaskar), டிவிட்டர் (vijayabaskarofl) இன்ஸ்டாகிராம் (vijayabaskarofl) பக்கங்களில் என் கைப்பட நான் பதிவிடும் செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மட்டுமே முற்றிலும் உண்மையானவை! மற்ற குழுப்பதிவுகளிலோ பிற பக்கங்களிலோ என்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு நான் பொறுப்பல்ல. இந்த போஸ்டர் செய்தி முற்றிலும் பொய்யானது, எனக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் சித்தரிக்கப்படுபவை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச

May22

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Feb18

கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க

Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Mar27

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற

Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

Feb23