More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 2 முக்கிய நிகழ்வுகள்” ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!
2 முக்கிய நிகழ்வுகள்” ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!
Mar 15
2 முக்கிய நிகழ்வுகள்” ஸ்டாலினின் தரமான செய்கை; ஆவலுடன் திமுகவினர்..!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதுடன் இன்று தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்குகிறார்.



சட்டப்பேரவை தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன . இவை அனைத்திற்கும் தொகுதி பங்கீடு ,தொகுதி பட்டியல் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.அடுத்த கட்டமாக வேட்புமனுத்தாக்கல் , பரப்புரை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் களமிறங்க உள்ளார்.



இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மதியம் 12 .15க்கு வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். அயனாவரத்தில் பழைய ஆறாவது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதே சமயம் திமுக தலைவர் மு .க . ஸ்டாலின் இன்று முதல் தனது சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் .திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5.30 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதனால் வேட்புமனு தாக்கலை முடித்துக்கொண்டு அவர் திருவாரூருக்கு பயணம் மேற்கொள்கிறார்.



முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை , கல்வி கடன் ரத்து ,நகை கடன் ரத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் – டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும், தமிழக குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் ,அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug26

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்க

Oct30

நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் வகை

Jul25

லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ

Apr30

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு

Apr21

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி

Feb07

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால

Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந

Jul04