More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்தா?
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு  17 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்தா?
Mar 05
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவிற்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரத்தா?

வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (வயது 74). 3 முறை பிரதமர் பதவி வகித்த இவருக்கு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



இந்தநிலையில், அவருக்கு உடல் நலத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6 மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம், மேலும் 6 மாதம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. இது வரும் 25-ந் தேதி முடிகிறது.



அவர் உள்நாட்டில் சிகிச்சை பெறலாம், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்பது ஜாமீன் நிபந்தனை ஆகும்.



தற்போது அவரது உடல்நலக்குறைவை கருத்தில் கொண்டு தண்டனையை ரத்து செய்வது குறித்து வங்காளதேசத்தின் ஷேக் ஹசினா அரசு பரிசீலனை செய்கிறது.



இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசதுஸ்ஸாமான் கான் கமல் கூறுகையில், “வங்காளதேச தேசியவாத கட்சியின்தலைவர் கலீதா ஜியாவின் தண்டனையை ரத்து செய்து, விடுவிப்பது குறித்து சட்ட அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இதையொட்டி அவரது சகோதரர் சமீம் இஸ்கந்தரிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அது சட்ட அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்” என தெரிவித்தார்.



இதனால் கலீதா ஜியாவின் தண்டனை ரத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு அங்கு எழுந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun21

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் குண்ட

Feb08

15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத

Jun12

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு

Sep21

மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Jun22

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்

Apr27

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே

Feb24

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே

Jul17

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர

Apr08

டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க

Mar21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய

Jan19

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச

Feb13

குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.

Apr01

அசாம் சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்

Sep10

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர