More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்!
Mar 06
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி துவக்கம்!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப்ப வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரங்களை, குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.



தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணைய உத்தரவின் படி, வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியும் ஆன அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.





விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், கணினி மூலம் முதற்கட்ட பரிசோதனை குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா, திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், திருகோவிலூர் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Jan26

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு

Mar12

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்

May09

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி

Jul20

பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற

Feb23

ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந

Mar11

இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ

Nov08

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்

Jun29
Aug12