More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்!
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்!
Mar 03
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்!

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசின் துணை அமைப்பான ராஜீவ் காந்தி வளர்ச்சி கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த ‘பிரதீக்‌ஷா 2030’ என்ற கருத்தரங்கம் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:



கடன் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் பலன் இருக்காது. சிறிய, நடுத்தர தொழில்கள்தான் பாதிக்கப்படும்.



நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக உள்ளது. அமைப்புசாரா தொழில்துறை சீர்குலைந்துள்ளது. இவற்றுக்கெல்லாம் 2016-ம் ஆண்டு நன்கு சிந்திக்காமல் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையே காரணம்.



கேரளாவிலும், இதர மாநிலங்களிலும் நிதி நிலவரம் மோசமாக உள்ளது. அந்த மாநிலங்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்குகின்றன. இது, எதிர்கால பட்ஜெட்டுகளில் தாங்கமுடியாத சுமையை உண்டாக்கும். கூட்டாட்சி முறையும், மாநிலங்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவதும் அவசியம். ஆனால், இன்றைய மத்திய அரசு இவற்றை செய்யவில்லை.



பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து கேரளா முன்னேற வேண்டும். கேரளாவில் தகவல் தொழில்நுட்பத்துறை செழிப்பான நிலையில் இருந்தாலும், கொரோனா தாக்கத்தால் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள வேலைவாய்ப்புகளை கேரளா பயன்படுத்திக் கொண்டுள்ளது. அதனால், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவது அதிகரித்துள்ளது. அதன்காரணமாக ரியல் எஸ்டேட் துறையும், சேவைத் துறையும் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு

Mar03

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந

Jul15

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச

Apr24

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.

Sep22

தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட

Jul30

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்

May20

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடு

May22

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச

Aug18

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை

Feb27

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Nov02

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ

Feb07

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை

Apr22

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்கள் சந்த