திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை, ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மகும்பல் செல்லதுரையை வெட்டி கொலை செய்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த முக்கூடல் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
“திருநெல்வேலி (கி) மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தம்பி செல்லதுரை சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். எல்லோருடனும் அன்புடன் பழகக்கூடிய குணத்தை பெற்றிருந்த தம்பியின் மரணம் கழகத்துக்கும் இளைஞரணிக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனா காலத்தில் காவல்துறையின் நெருக்கடியையும் மீறி பல நூறு குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் தம்பி செல்லதுரை. அவரது மரணத்துக்கு காரணமான கொலையாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.