மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையொட்டி இன்று காலை தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக தலைமை கழகத்திற்கு வந்து இருந்தனர்.
அங்குள்ள ஜெயலலிதா சிலை வளாகம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, மாபா.பாண்டியராஜன், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ,
அவை தலைவர் மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி.மனோஜ்பாண்டியன், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், சாத்தான்குளம் முன்னாள் சேர்மன் ஆனந்த ராஜ்,
மாவட்ட செயலாளர்கள் சத்யா, விருகை ரவி, வேளச்சேரி அசோக், ஆதி ராஜாராம், பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, காஞ்சிபுரம் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், காஞ்சி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயின், நொளம்பூர் இமானுவேல், முகப்பேர் இளஞ்செழியன்,
ஜெயலலிதா பேரவை துணை செயலாளர், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர், பெரும்பாக்கம் ராஜசேகர், காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, தி.நகர் மின்சார சத்தியநாராயண மூர்த்தி, ராயபுரம் கிழக்கு பகுதி செயலாளர் ஏ.டி.அரசு, மு.வடசென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, மாணவர் அணி ராமலிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அங்கு ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 73 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிக் கொண்டனர். தொண்டர்களுக்கும் கேக் வழங்கினார்கள். சிறப்பு மலரும் அங்கு வெளியிடப்பட்டது.