தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 3ஆவது கட்ட பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) விழுப்புரத்தில் ஆரம்பித்தார்.
இதன்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நாங்கள் சொல்வதை ஆளுங்கட்சியினர் செய்து வருகின்றனர். மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்யப்படும்” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.