சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதில் தண்டனை காலம் நிறைவு மற்றும் இந்திய மதிப்பில் 10 கோடியே 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்தியதால் கடந்த 27ஆம் திததி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
இளவரசியும் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தி இருந்தார். இதனால் அவர் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூர் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே இளவரசி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் பெங்களூர் விக்டோரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு திரும்பி இருந்தார்.
இந்நிலையில், இளவரசியின் தண்டனை காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளதால் இன்று காலை 11 மணியளவில் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளார்.