ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்தியா இரு கிரேன்களை வழங்கியுள்ளது.
துறைமுகத்தில் பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் வசதியாக 140 டன் எடை கொண்ட கிரேன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகயி நாடுகளின் வணிகத்தை மேம்படுத்தும் வகையில் இந்தத் துறைமுகம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு, இந்தியா இதுவரை நன்கொடையாக வழங்கிய 75 ஆயிரம் டன் கோதுமையை இந்தத் துறைமுகத்தால் கையாள முடிந்தது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.