More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!
Jan 25
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து- உலக சுகாதார நிறுவனம் பாராட்டு!

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.



உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.



அந்தவகையில் தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் கடந்த 16ஆம் திகதி முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



இதேவேளை  பிரேசில், வங்காள தேசம், பக்ரைன், பூட்டான், மாலைத்தீவு, மொரீசியஸ், மங்கோலியா, மொராக்கோ, மியான்மர், நேபாளம், ஓமன், சிசெல்லஸ், இலங்கை ஆகிய 13 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி மருந்தை ஏற்றுமதி செய்கின்றது.



அதில் மாலைத்தீவு, பூட்டான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இலவசமாகவும் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி உதவி செய்து வருவதால், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.



இவ்விடயம் தொடர்பாக  உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதோனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கி உதவி செய்து வருவதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



நாம் அனைவரும் ஒருங்கிணைந்து உதவுவதாலும் தகவல்களை பரிமாறிக் கொள்வதாலும்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar15

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச

Feb21

 இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத

Sep08

இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக

Jul26

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்களில், அரசுப் பள்ளி ம

Mar03

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணை

May11

சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக  மாறியுள்

Jul08

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத

Jun29

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs

Sep15

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர

Mar13

சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை

Jul18

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள

Apr24

உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக

Jun20
Sep01

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா