More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில்!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில்!
Sep 20
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில்!

தாம் உயிருக்கு உயிராக நேசிக்கும் அரசியல் தலைவர் அபிமான நட்சத்திரத்துக்கு தொண்டரோ ரசிகரோ கோவில் கட்டுவது நம் நாட்டில் வழக்கம்தான். அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அந்த ஊர்க்காரரான பிரபாகர் மவுரியா முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார்.



இங்கு தலைக்குப் பின் ஒளிவட்டம் வில்-அம்புடன் யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. காவி ஆடையும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலில் காலை மாலை இருவேளை பூஜையுடன் 'பக்தர்களுக்கு' பிரசாதமும் வினியோகிக்கப்படுகிறது.



ராமர் கோவில் கட்டப்படும் ராம ஜென்ம பூமியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்தக் கோவில் உள்ளது. கோவிலை கட்டியுள்ள பிரபாகர் மவுரியா 'தனது மக்கள் நலப்பணிகளால் கடவுள் நிலையை எட்டியுள்ளார் யோகிஜி. அதனால்தான் அவருக்கு கோவில் கட்டும் எண்ணம் எனக்கு வந்தது.

ராமர் கோவில் கட்டும் அவருக்கு நான் கோவில் கட்டியுள்ளேன்' என்கிறார்.



ராமரை தான் வழிபடுவதைப் போலவே தினமும் யோகி ஆதித்யநாத்தை மந்திரம் சொல்லி வழிபடுவதாக மவுரியா கூறுகிறார். மவுரியாவுக்கு நிரந்தர வேலையோஇ நிலமோ இல்லை. அப்படியானால்இ இந்தக் கோவில் கட்டுவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டால்... 'பஜனைகள் பக்திப் பாடல்களை நான் யூடியூப்பில் வெளியிட்டு மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன்.



அந்தப் பணத்தில்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கிறேன்' என்று விளக்கம் அளிக்கிறார். இதற்கிடையில் 'யோகி ஆதித்யநாத் கோவில்' பற்றி கேள்விப்பட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரு பூடகமான டுவிட்டர் பதிவை வெளியிட்டிருக்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்

Mar31

கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்

Feb07

எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ

Mar03

60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந

Jul26

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4

Oct17

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக

Jul18

மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்

Feb03

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Jan20

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிகாடு பகுதியைச்

Oct14

இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவ

Jul14

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத

Aug19