More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!
Feb 23
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒரு மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும். புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சித்ரவதைகளை தடுக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் விசாரிக்க தொடங்கியது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் விவகாரத்தில் மாநில, மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவையான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் 'நைட் விஷன்' திறனுடன் இருக்க வேண்டும். அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு பாதுகாக்க வேண்டும். போலீஸ் நிலையங்களில் கைதிகள் தாக்கப்படுவது, சித்ரவதை, மரணம் போன்ற புகார்கள் தெரிவிக்கப்படும்பட்சத்தில் மாநில மனித உரிமை ஆணையமும், கோர்ட்டுகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டுப்பெற வேண்டும். சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார நுண்ணறிவு பிரிவு, தீவிர குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இந்த உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 6 வாரங்களுக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 25 மாநில யூனியன் பிரதேச அரசுகள் இன்னும் பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் சித்தார்த்தா தவே தெரிவித்தார். அதை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம். இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில உள்துறைச் செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள

Mar28

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர

Mar30

கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம

Sep05

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்

Jul18

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க

Oct04

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள

May29

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

Apr08

 மேலும்  சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அ

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

Apr05

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண

Apr24

ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்

Jun10

     தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித

Jun11

 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ

Jan25