More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஐயோ சாமி ஆளா விடுங்க...சசிகலா குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய ஓ.பன்னீர்செல்வம்..!
ஐயோ சாமி ஆளா விடுங்க...சசிகலா குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய ஓ.பன்னீர்செல்வம்..!
Mar 08
ஐயோ சாமி ஆளா விடுங்க...சசிகலா குறித்த கேள்விக்கு தெறித்து ஓடிய ஓ.பன்னீர்செல்வம்..!

அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று தேனியில் அதிமுக நிர்வாகிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.



இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியை அமைத்தது.



இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தோல்வியை தழுவியது. தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் ஆளும் கட்சியான திமுக 21 மாநகராட்சியையும் கைப்பற்றியது.



மேலும் பல்வேறு இடங்களிலும் பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்தது. சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக ஒரு சட்டமன்ற தொகுதியை கூட கைப்பற்றாத நிலையில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை தன் வசமாக்கியது.



தொடர் தோல்விகளால் துவண்டு போன அதிமுக நிர்வாகிகள் சிலர் மீண்டும் அதிமுகவில் சசிசலாவை இணைக்க வேண்டும் என்று கூறினர்.



இந்நிலையில் தேனியில் அதிமுக நிர்வாகிகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கட்சியில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இதையடுத்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்து கட்சியில் மீண்டும் சசிகலாவை இணைத்தால் மட்டுமே கட்சி வரும் காலங்களில் வெற்றி பெரும் என்றார்.



இதற்கு எதிராக கடலுார் மாவட்ட அதிமுகவினர் கட்சியில் மீண்டும் சசிகலாவை இணைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முல்லை பெரியாறு அணையில் எந்த ஒரு திட்டமும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் தமிழ்நாட்டின் அனுமதியை பெற்று தான் அவர்கள் கட்ட முடியும் என்றார்.



மேலும் சர்வதேச மகளிர் தினத்தை அடுத்து அவர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.அப்போது செய்தியாளர் ஒருவர் சசிகலா குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஐயோ ஆளா விடுங்க சாமி..! என நழுவி சென்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்

Jan23

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ

Mar15

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

Mar20

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய

Jun07

இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உ

Mar12

திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை

May07

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப

Mar07

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய

Apr16

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப

May29

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Aug01

புதுச்சேரியில் தினசரி கொரோனா  பரவல் 100-க்கு கீழ் குறை

Mar23