பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில், இந்திய தூதர் முகுல் ஆர்யா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய தூதர் முகல் ஆர்யாவின் மறைவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து டுவிட்டரில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு -
டுவிட்டர் பதிவில், முகுல் ஆர்யாவின் மறைவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். அவர் ஒரு திறமையான அதிகாரி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐஎஃஎல் பிரிவைச் சேர்ந்த முகுல் ஆர்யா, கடந்த 2008ம் ஆண்டு ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்திய தூதகரகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.