பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணைப்பு பற்றி பார்த்திருப்போம், இந்த கான்செப்ட் பலரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது. படங்களை தொடர்ந்து சில தொடர்களும் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வர ஆரம்பித்துவிட்டது. தற்போது நிஜமாக அண்ணன்-தங்கை இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு பாசப்பிணைப்பு தான் வைரலாகி வருகிறது. எவ்வளவு தான் அண்ணன், தங்கைக்குள் சண்டை இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கொள்ளமால் எந்த நிலையிலும் உதவுவார்கள் என்பதை இந்த வீடியோ காண்பிக்கிறது. அண்ணன் ஒருவன் அவனது சகோதரிக்கு போனிடெயில் கட்ட உதவுகின்ற காட்சி பலரையும் ஈர்க்க செய்திருக்கிறது.