More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இளம்பெண்ணை கொலை செய்த மகன் - ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த தந்தை
இளம்பெண்ணை கொலை செய்த மகன் - ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த தந்தை
Feb 24
இளம்பெண்ணை கொலை செய்த மகன் - ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த தந்தை

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கேரல் என்பவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற நிலையில் இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை.



இதனைத் தொடர்ந்து பதற்றமடைந்த அவரது பெற்றோர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் கேரலின் சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப்பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.



தொடர்ந்து கேரலின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் தகவல்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜீக்கோ என்ற கேரலின் நண்பர் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜீக்கோவின் தந்தை அன்சேம் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். 



அதில் ஜீக்கோ சம்பவம் நடந்த இரவு பைக்கில் வெளியே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் வீட்டில் மறைத்து வைத்திருந்த அவரது லேப்டாப்பையும் எடுத்து ஆராய்ந்ததில் அன்சேம் திரட்டி காவல் நிலையத்திற்கு போன் செய்து மகனை பிடித்துள்ளார். 



ஜீக்கோவிடம் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்த காரணத்தால் கேரலை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



 



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul24

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ

Jun19
Jun24

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட

Dec20

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவி

Aug13

நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம

Nov27

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து,

Nov12

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி

Feb07

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதி

Mar26

திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க

Jun09