More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 45 நிர்வாகிகள் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் - திமுக தலைமை அதிரடி!
45 நிர்வாகிகள் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் - திமுக தலைமை அதிரடி!
Feb 18
45 நிர்வாகிகள் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் - திமுக தலைமை அதிரடி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக நிர்வாகிகள் 45 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் என்று சொல்லப்படும் திமுக, அதிமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ,தேர்தலை சந்திக்கின்றன.



இந்த சூழலில்  தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த திமுக, அதிமுக உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமைக்கு எதிராக தனித்து களமிறங்க திட்டமிட்டு சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.இதன் காரணமாக திமுக, அதிமுக கட்சியிலிருந்து தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என கட்டம் கட்டி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் 100ற்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 



இந்நிலையில் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 45 திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக கட்சியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளனர். கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுவரை 140க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை  தற்காலிக நீக்கம் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந

Aug13

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர

Apr06

சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில

Aug18

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந

May04

உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா

Jun09

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த

Jan26

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்

Oct04

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள

Jan27

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா

Feb22

புதுச்சேரி வில்லியனூர் அர

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

Mar21

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந

Mar15

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருவடிக

Jun06

கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு