மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்திரமாக இராணுவம் மீட்டகப்பட்டதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கேரளா பாலாக்காட்டை சேர்ந்த பாபு நண்பர்களுடன் செல்லும் போது மலையில் சிக்கிய நிலையில் இரண்டு நாட்களாக அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வந்தனர்.
உணவு தண்ணீர் ஏதுவுமின்றி இருந்த அவரை மீட்க இராணுவம் விரைந்த நிலையில், தீவிர முயற்சியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மலம்புழா பாறையில் சிக்கிய அவரை 43 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக இராணுவம் மீட்டுள்ளது.
ராணுவ அதிகாரி அவருக்கு உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய 40 நிமிட பணியின் முடிவில் ராணுவம் பாபுவை மலை உச்சிக்கு அழைத்துச் சென்றது.பாபுவை மீட்க துணிச்சலாக இராணுவ வீரர்கள் கயிற்றை கொண்டு 400 அடி கீழே இறங்கி மீட்டுள்ளனர். தற்போது அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இராணுவ வீரர்களின் துணிச்சலான செயலுக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.